போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் லோதி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாரா-தேசிய விளையாட்டுப் போட்டி தொடரின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது திறமையை நிரூபித்து பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற மன்மோகன் சிங் லோதிக்கு மத்திய பிரதேச அரசு சார்பில் அரசு வேலை தருவதாக அதிகாரிகளால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. வாக்களிக்கப்பட்ட வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு நான்கு முறை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த போதிலும் அரசு வேலை தொடர்பாக இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.அரசு வேலையை எதிர்பார்த்து இனி பயன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்த மன்மோகன் சிங் லோதி தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக போபால் நகரில் உள்ள தெருக்களில் பிச்சை எடுத்து காலத்தை ஓட்டி வருகிறார்.

சாமியாருக்காக எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் அரசு பதவிகளை வாரி இறைக்கும் மத்திய பிரதேச பாஜக அரசு,மன்மோகன் சிங் லோதி போன்ற திறமையான வீரருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களுக்காக உழைக்கிறாரா இல்லை சாமியாருக்காக உழைக்கிறாரா என்பதை இந்நிகழ்வு மூலம் புரிந்து கொள்ளலாம்.

Leave A Reply

%d bloggers like this: