புதுதில்லி
‘மௌனம்தான் ஆதாரம்’
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஜெயப்பால் ரெட்டி திங்களன்று புதுச்சேரிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட ரபேல் விமானங்களில் ரூ. 41,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. பிரதமர் மோடியின் மௌனம்தான் அந்த மிகப்பெரிய ஊழலுக்கு ஆதாரம்’ என்றார்.

சென்னை
முந்தியதால் வழக்கு!
காரை முந்திச்சென்றதாகக் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் மீது காவல்துறை
யினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர், தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 7 பேர் மீது அடையாறு போக்கு
வரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை
மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல் ஒவ்வாமை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தொடர் பயணத்தின் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண  பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார் என விசிக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்
‘கண் திருஷ்டியப்பா’
விருதுநகரில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “எடப்பாடி ஆட்சியில் எதை
யெல்லாம் செய்ய முடியாது என்றார்களோ அதையெல்லாம் முதல்வர் செய்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து அணை களும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிலரின் கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது” எனக் கூறினார்.

சென்னை
இலவச நீட் பயிற்சி செப்.8ல் தொடங்கும்
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 412 பயிற்சி மையங்களில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி இலவச வகுப்புகள் தொடங்கும்
என்றும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை  நாட்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த 3 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்
படும் நீட் பயிற்சி வகுப்புகளில் நீட் வழிகாட்டி கையேடு, நோட்டுகள் ஆகியவை இலவசமாகவே வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.