கோயம்புத்தூர்:
கோவை மாவட்டத்தில் தீக்கதிர்  சந்தா சேர்ப்பு இயக்கம் மும்முர மாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக 7 மையங்களில் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆசிரியரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கத்திடம் 141 சந்தா விற்கான தொகை வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் ஆனை மலை ஒன்றியக்குழுக்களின் சார்பில் பொள்ளாச்சியில் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அரங்க குழுக்களின் சார்பில் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திலும் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல் தொண்டாமுத்தூர் ஒன்றியம் நம்பியழகன் பாளையம், மதுக் கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி, தெற்கு தாலுகா குழுவிற்குட்பட்ட குனியமுத்தூர், கிழக்கு நகர்குழுவிற்குட்பட்ட காமராஜபுரம் ஆகிய மையங்களில் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூலூர் தாலுகா குழு சார்பில் சூலூரில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று சந்தாக்களை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய
லாளர் வி.இராமமூர்த்தி, தீக்கதிர் எண்மபதிப்பின் பொறுப்பாசிரி யரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், எஸ்.கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், ஒன்றிய செயலாளர்கள் கே.மகாலிங்கம், என்.ஆறுச்சாமி, வி.எஸ்.பரமசிவம், பி.ரவிச் சந்திரன், நாகேந்திரன், என்.ஜாகீர்,
எம். ஆறுமுகம் மற்றும் ஒன்றியக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: