வரலாறு காணத வகையில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ 1 கோடியை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ 1 கோடி வழங்கியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான்  பல்வேறு இடங்களில் இசைநிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகளை “கேரளா… கேரளா…டோண்ட் வொர்ரி கேரளா… என்று மாற்றிப் பாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். மேலும் படியதோடு மட்டுமின்றி இசைநிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ரூ 1 கோடியை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது , அமெரிக்காவில் தன்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கலைஞர்களும், நானும் சேர்ந்து இந்த சிறிய உதவியைச் செய்கிறோம். இது துயரத்தில் வாடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: