காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியாவை சுட்டு கொல்ல போவதாக பாஜக எம்எல்ஏ மகன் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் கAdd Newட்டா விதான் சபா என்ற சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த உமா தேவி ஹத்திக். இவரது மகன் பிரின்ஸ்தீப் லால்சந்த் ஹத்திக் . தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் இவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்தியா சிந்தியாவை சுட்டு கொல்ல போவதாக மிரட்டி முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ”ஜோதிராதித்யா சிந்தியா, உங்கள் உடலில் ஜான்சி ராணியை கொன்ற சிவாஜிராவ் உடைய ரத்தம் ஓடுகிறது. ஆனால் நீ கட்டாவில் கால் வைத்தால் நான் உன்னை சுட்டுத்தள்ளுவேன்”என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ராஜா படேரியா கூறுகையில், சிந்தியா இந்தியா முழுவதும் அனைவராலும் விரும்பப்பட்டவர். பாஜகவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. மேலும், இந்த பதிவு குறித்து காவல்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் மற்றும் சிந்தியாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.