தீக்கதிர்

ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியா சாதனை…!

ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8–வது இடத்தை பிடித்தது.ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை அறுவடை செய்வது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 2010–ஆம் ஆண்டில் நடைபெற்ற 16-வது சீசனில் 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கம் வென்றதே அதிகபட்ச பதக்க சாதனையாக இருந்தது.தற்போது அந்த சாதனையை இந்தியா முறியடித்து இருக்கிறது.இருந்தாலும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நம் நாட்டிற்கு இந்த 69 பதக்கம் போதாது…