நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் தற்போது நான்காவது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

திங்களன்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரனைச் சேர்ந்த ஸ்விட்லோனியா,லத்வியாவைச் சேர்ந்த செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் செவஸ்டோவா 6-3,1-6,6-0 என்ற செட் கணக்கில் ஸ்விட்லோனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
தரவரிசையில் சிறந்த நிலையில் இருக்கும் ஸ்விட்லோனியா (7-ஆம் இடம்) தன்னை எதிர்த்து விளையாடும் வீராங்கனைகளை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிழிந்தெடுத்துவிடுவார்.

இத்தகைய சிறப்புடைய ஸ்விட்லோனியாவை தரவரிசையில் பின் தங்கியுள்ள செவஸ்டோவா (19-ஆம் இடம்) வீழ்த்தியதை உற்றுநோக்கும் பொழுது டென்னிஸ் உலகில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

காலிறுதிக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்:

ஆடவர் ஒற்றையர்
நடால் (ஸ்பெயின்)
டெல்போர்ட்டோ (அர்ஜெண்டினா)
தியம் (ஆஸ்திரியா)
ஆண்டர்சன் (தெ.,ஆப்பிரிக்கா)
ஜான் இஸ்னர் (அமெரிக்கா)

 

மகளிர் ஒற்றையர்
செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா)
ஸ்டீப்ஹென்ஸ் (அமெரிக்கா)
பிளிஸ்கோவா (செக்குடியரசு)

Leave a Reply

You must be logged in to post a comment.