திருப்பூர்,
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு, திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியுடன் ஞாயிறன்று துவங்கியது.

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின்3ஆவது மாநில மாநாடு திருப்பூரில் ஞாயிறன்று  தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக ஞாயிறன்று மாலை யுனிவர்சல் திரையரங்கம் முன்பிருந்து மாற்றுத் திறனாளிகள் பேரணி தொடங்கியது. பேரணியில் ஊனமுற்றோர் தேசிய மேடையின் பொதுச்செயலாளர் வி.முரளிதரன், மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் டி.லட்சுமணன் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர். பேரணி திருப்பூர் யுனிவர்சல் சாலையில் இருந்து குமரன் சாலைவழியாக டவுன்ஹால் மைதானத் தைச் சென்றடைந்தது. முன்னதாகவழி நெடுக மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும், அவற்றை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. பேரணியை திருப்பூர் குமரன் சாலை – கோர்ட் சாலை சந்திப்பில் ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழுவினரும், வடக்கு காவல் நிலையம் அருகில் ஜன நாயக வாலிபர் சங்கத்தினரும் வரவேற்று, மாநாடு வெற்றி பெற வாழ்த்துமுழக்கமிட்டனர்.

பேரணியின் முகப்பில் திருப்பூர்கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. உடல் உறுப்புகளில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில்ஊனமில்லை என்று உற்சாகத் தோடும், எழுச்சியோடும், கட்டுப் பாட்டுடனும் மாற்றுத் திறனாளிகள் பேரணியாய் அணிவகுத்து சென்றது பார்ப்போரை வெகுவாக ஈர்த்தது.டவுன்ஹால் அரங்கில் மாநாட்டுப் பேரணி நுழைந்ததும், பொதுமாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாற்றுத்திறனாளி கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது. டவுன்ஹால் மைதானம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொது மாநாடு:
இதைத் தொடர்ந்து நடை பெற்ற பொது மாநாட்டில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., ஊனமுற்றோர் தேசிய மேடை பொதுச் செயலாளர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். மாநாட்டு நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் வரவேற்றார். வரவேற்புக்குழுத் தலைவர் பிரபாகரன், செயலாளர் டி.ஜெயபால் உள்பட மாநாட்டு வரவேற்புக் குழுவினரும் மாநாட்டு பணிகளை மேற்கொண்டிருந்தனர். திங்களன்று பிரதிநிதிகள் மாநாடுதொடங்கி செவ்வாயன்று நிறைவடைகிறது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.