சேலம்,
சேலத்தில் தனியார் சிபிஎஸ்இபள்ளியில் 3 ஆவது வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாநகரத்தின் மையப்பகுதியில் செயல்படும் தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பயின்று வருகிறார். அப்பள்ளியில் கணித ஆசிரியராக சதீஸ் பணியாற்றுகிறார். இவர் நீண்ட நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இதனை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியும் உள்ளார். இதனால் சிறுமி வீட்டில் சோர்வாக இருந்ததை அறிந்த பெற்றோர்கள், மாணவியிடம் விசாரித்ததில் நடந்த சம்பவத்தை மாணவிபெற்றோரிடம் கூறினார். இதனால் மாணவியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று ஆசிரியர் சதீஸைதாக்கினர். அதன்பின் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

‘பின்னர் இந்த வழக்கு சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர். அதில், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.