திருப்பூர்,
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் குடும்பத்தாரின் திருமண விழாவில் புது மணமக்கள், தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவன் கட்டுவதற்காக நிதி வழங்கினர்.

திருப்பூர் அவிநாசி ஒன்றியம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் ஆர்.ஈஸ்வரன், சாந்தி தம்பதியரின் மகள் ஈ.விசித்ராவுக்கும், திருப்பூர் கே.தண்டபாணி – டி.சரோஜினி தம்பதியரின் மகன் டி.கோபாலகிருஷ்ணனுக்கும் கடந்த 29ஆம் தேதி பெரியாயிபாளையம் சாலையில் அமைந்துள்ள விஸ்வாஸ் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக 28ஆம் தேதி செவ்வாயன்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது இரு வீட்டார் முன்னிலையில் மணமக்கள் கோபாலகிருஷ்ணன் – விசித்ரா இருவரும் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தில்லியில் கட்டப்படும் தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவனுக்கான நிதி ரூ.5 ஆயிரத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். அப்போது மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதேபோல் திருப்பூர் தெற்கு ஒன்றியம் சீராணம்பாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் எஸ்.கே.பழனிசாமி – பி.ருக்குமணி தம்பதியரின் மகள் பி.காயத்ரிக்கும், திருப்பூர் பாளையக்காடு கே.சண்முகம் – எஸ்.முத்துலட்சுமி தம்பதியரினஅ மகன் எஸ்.லோகேஷுக்கும் ஞாயிறன்று 63 வேலம்பாளையம் கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் திருமண மண்ட
பத்தில் திருமணம் நடைபெற்றது.

முன்னதாக சனியன்று வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமக்கள் லோகேஷ் – காயத்ரி இருவரும் மணவீட்டார் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவன் கட்டட நிதி ரூ.5 ஆயிரத்தை வழங்கினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.