கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டர்.

பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் விபரம் பின்வருமாறு: மேட்டுப்பாளையம் ஆண் வாக்காளர் – 133168, பெண் வாக்காளர் – 139070 மூன்றாம் பாலினம் – 27, மொத்தம் – 272265 வாக்காளர்களும், சூலூர் – ஆண் வாக்காளர் 141564, பெண் வாக்காளர் – 145053, மூன்றாம் பாலினம் – 12, மொத்தம் – 286629 வாக்காளர்களும், கவுண்டம்பாளையம் – ஆண் வாக்காளர் 208432, பெண் வாக்காளர் 208132, மூன்றாம் பாலினம் 69, மொத்தம் – 41633 வாக்காளர்களும், கோவை வடக்கு – ஆண் வாக்காளர் 156875, பெண் வாக்காளர் 154269, மூன்றாம் பாலினம் 27, மொத்தம் 311171 வாக்காளர்களும், தொண்டாமுத்தூர் ஆண் வாக்காளர் 151143, பெண் வாக்காளர் -151969, மூன்றாம் பாலினம் – 55, மொத்தம் – 303167 வாக்காளர்களும் உள்ளனர். மேலும், கோவை தெற்கு – ஆண் வாக்காளர் 120749, பெண் வாக்காளர் 120685, மூன்றாம் பாலினம் 14, மொத்தம் 241448 வாக்காளர்களும், சிங்காநல்லூர் ஆண் வாக்காளர் 150382, பெண் வாக்காளர் 151417,  மூன்றாம் பாலினம் 25, மொத்தம் 301824 வாக்காளர்களும், கிணத்துக்கடவு ஆண் வாக்காளர் 144106, பெண் வாக்காளர் 147149, மூன்றாம் பாலினம் 31, மொத்தம் 291286 வாக்காளர்களும், பொள்ளாச்சி ஆண் வாக்காளர் 103613, பெண் வாக்காளர் 109980, மூன்றாம் பாலினம் 14, மொத்தம் 213607 வாக்காளர்களும், வால்பாறை ஆண் வாக்காளர் 94971, பெண் வாக்காளர் 100494, மூன்றாம் பாலினம் 14, மொத்தம் 195479 வாக்காளர்களும் உள்ளனர்.

மொத்த வாக்காளர்கள்: ஆண் வாக்காளர்கள் 1405003, பெண் வாக்காளர்கள் – 1428218, மூன்றாம் பாலினம் – 288 மொத்தம் – 2833509 பேரும் உள்ளனர். தற்போது பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகள் அக்டோபர் மாதம் இறுதிவரை பெறப்படுகிறது.இதில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படவில்லை, ஒருவரின் பெயர் பல முறைவந்துள்ளது போன்ற குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா.ராம மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டர். இராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,10,127 ஆண், 1,13,882 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,24,009 வாக்காளர்களும், சேந்தமங்கலம் (எஸ்டி) சட்டமன்ற தொகுதியில் 1,13,418 ஆண், 1,17,130 பெண் வாக்காளர்கள், 13 மற்றவர்கள் என மொத்தம் 2,30,561 வாக்காளர்களும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,18,423 ஆண், 1,25,477 பெண், 37 மற்றவர்கள் என மொத்தம் 2,43,937 வாக்காளர்களும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 101233 ஆண், 107431 பெண், 6 மற்றவர்கள் என மொத்தம் 208670 வாக்காளர்களும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 106168 ஆண், 110922 பெண், 34 மற்றவர்கள் என மொத்தம் 217124 வாக்காளர்களும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 116054 ஆண், 120127 பெண், 24 மற்றவர்கள் என மொத்தம் 236205 வாக்காளர்களும் உள்ளனர். மேலும், மாவட்டத்திலுள்ள மொத்த ஆண் வாக்காளர்கள் 6,65,423, பெண் வாக்காளர்கள் 6,94,969, மற்றவர்கள் 114 என நிகர வாக்காளர்கள் 13,6,0506 உள்ளனர்.

ஈரோடு
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட மாநகராட்சி ஆணையாளர் மு.சீனிஅஜ்மல்கான் பெற்றுக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,05,524 ஆண் வாக்காளர்களும், 1,09,452 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலினத்தவரும் என 2,14,980 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1,30,950 ஆண் வாக்காளர்களும், 1,34,131 பெண் வாக்காளர்களும், 22  மூன்றாம் பாலினத்தவரும் என 2,65,103 வாக்காளர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1,08,472 ஆண் வாக்காளர்களும், 1,16,460 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலினத்தவரும் என 2,24,960 வாக்காளர்களும் உள்ளனர்.மேலும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1,03,754 ஆண் வாக்காளர்களும், 1,08,260 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் என 2,12,015 வாக்காளர்களும், பவானி சட்டமன்ற தொகுதியில் 1,13,864 ஆண் வாக்காளர்களும், 1,15,823 பெண் வாக்காளர்களும் என 2,29,687 வாக்காளர் உள்ளனர், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1,03,974 ஆண் வாக்காளர்களும், 1,05,687 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தவரும் என 2,09,666 வாக்காளர் உள்ளனர், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,18,020 ஆண் வாக்காளர்களும், 1,24,590 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலினத்தவரும் என 2,42,616 வாக்காளர் உள்ளளர்.

பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,19,874 ஆண் வாக்காளர்களும், 1,23,485 பெண் வாக்காளர் களும், 4 மூன்றாம் பாலினத்தவரும், என 2,43,363 வாக்காளர்களும் ஆக மொத்தம் 9,04,432 ஆண் வாக்காளர்களும், 9,37,888 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலினத்தவரும் என 18,42,390 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மேலும் ஆண் வாக்காளர்களைவிட 33,456 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

சேலம்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டார். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,28,950 ஆண் வாக்காளர்களும், 1,33,655 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர் என மொத்தம் 2,62,612 வாக்காளர்களும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,23,737 ஆண் வாக்காளர்களும், 1,28,118 பெண் வாக்காளர்களும், 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,51,869 வாக்காளர்கள் உள்ளனர்.

நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர் (தனி), குன்னூர் ஆகிய 3 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.