சென்னை :

தமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அளித்துள்ள  புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஐஜி பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றிருக்கிறார் பெண் எஸ்பி. அப்போது உள்ளே சென்ற பெண் எஸ்பியிடம் ஐஜி தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்

ஏற்கனவே இதே ஐஜி பல முறை பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். இந்நிலையில் பெண் எஸ்பி தனக்கு நேர்ந்து பாலியல் தொல்லைகள் குறித்து  முறையாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கிறார்.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது முதல்வர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடமும் புகார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அவசர அவரமாக பெண் போலீஸ் கூடுதல் டிஜிபி சீமா  அகர்வால் தலைமையில் கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர்  கொண்ட  விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் புகார் குறித்து சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை உள்புகார் விசாரணை குழுவான விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து விசாகா கமிட்டி அளித்துள்ள விளக்கத்தில், பாலியல் புகார் அளித்த எஸ்பி ஆக.,29 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. புகாருக்குள்ளான ஐஜி.,யை இடமாற்றம் செய்ய வேண்டும். குழுவை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் எஸ்பி கோரிக்கை வைத்திருந்தார். கோரிக்கை குறித்து முடிவெடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் இந்த புகார் குறித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.

புகாருக்குள்ளானது லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஐஜி குறித்து பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் மீதான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண் எஸ்பி., அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதால் சிபிசிஐடி.,க்கு மாற்றம் பரிந்துரைத்துள்ளோம் என ஏடிஜிபி சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.