தீக்கதிர்

பெண்கள் அழகாக இருப்பதால் பாலியல் பலாத்கார சம்பவம் நடக்கிறது- பிலிப்பைன்ஸ் அதிபரின் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மகளிர் அமைபுகள் கண்டனம்

மணிலா :

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியூட்ரெட் பதவி வகிக்கிறார். இவர் தனது சொந்த ஊரான தவாயோவில் நடந்த விழாவுக்கு சென்று இருந்தார். இதற்கு முன்பு இங்கு இவர் மேயராக பதவி வகித்தவர்.

அந்த விழாவில் பேசும் போது, ‘‘போலீஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. அவரது பேச்சு விழாவில் பங்கேற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது. ஜனாதிபதி டியூட்ரெட்டின் இப்பேச்சுக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.