ஜகர்தா :

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப்போட்டி கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 14வது நாளான இன்று இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இன்று நடந்த ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியின் 49கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் உஷ்பேகிஷ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹாசன்பாய் துஸ்மாதோவுக்கு எதிராக விளையாடினார். இதில் மிகத்திறமையாக விளையாடிய இந்திய வீரர் அமித் பங்கல் 3-2 என்ற தங்கப்பதக்கத்தை வென்றார்.

மேலும், குத்துச்ச்சண்டையில் இணைப்போட்டி(பேர் பிரிஜ் ஈவண்ட்)யில் இந்தியாவின் பிரனாப் பரதன் மற்றும் சிப்னாத் சர்கார் ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர். இதன்மூலம், நடப்பு ஆசிய தொடரில் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து நடந்த மகளிருக்கான குவாஸ் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. திபிகா பல்லிகல், ஜோகனா சின்னப்பா, சுனைனா குருவிலா மற்றும் தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய அணி ஹாங்காங் நாட்டு அணிக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் 0-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

Leave A Reply

%d bloggers like this: