சேலம் :

சேலத்தில் போருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. படுகாயமடைந்த 30-க்கும் அதிகமானோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் பெங்களூர் தேசிய நெஞ்சாலையில் உள்ள மாமங்கம் என்ற இடத்தில் பூக்களை ஏற்றி சென்ற லாரி பழுதாகி நின்று கொண்டிருந்தது. சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மினி லாரி மீது மோதியது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத்தடுப்பை தாண்டி மறுப்பக்கத்தில் நுழைந்தது.

அப்போது பெங்களூருவிலிருந்து, பாலக்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், ஆம்னி பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். காயமடைந்த 30க்கும் அதிகமானோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: