தீக்கதிர்

செல்பி மோகத்தால் அணையில் விழுந்து இருவர் பலி

ஓசூர் :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் விழுந்து 2 பேர் பலியான சம்வம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழையினால் தமிழகத்தில் பல அணைகள் நிரம்பி வருகின்றன. அதேபோல், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையும் நிரம்பி வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் செல்பி எடுக்க முயன்றனர். அதில் ஒருவர் தவறி அணையில் விழுந்து பலியானார். அப்போது அதை கண்ட அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் காப்பாற்ற அணையில் குதித்துள்ளார். ஆனால், அவரும் அணையில் மூழ்கி பலியானார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் ஒருவரின் உடலை மீட்டனர். மேலும், நீரில் மூழ்கிய ஒருவரின் உடலை தேடி வருகின்றனர்.