கேரளாவில் வெள்ளத்தினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டிலும் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மக்களே சேகரித்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி மற்றும் ஒரு மாத ஊதியம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியுள்ள அறிக்கையில்; கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் அளித்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் அவர்களுக்கு இன்று (01.09.2018) அனுப்பியுள்ளார். என இவ்வாறு அதில் தெரிவித்தனர்

Leave a Reply

You must be logged in to post a comment.