தீக்கதிர்

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 23பேர் பலி

திருவனந்தபுரம் :

இந்தாண்டு தென்மேற்கு பருவமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் கடும் பாதிப்படைந்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்குள் கேரளாவின் சில பகுதிகளில் லெப்டோ ஸ்பைரிஸ் எனப்படும் எலி காய்ச்சலுக்கு கடந்த 5 நாட்களில் 23 பேர் பலியாகி உள்ளனர்.

எலி காய்ச்சலுக்கு அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், திருச்சூர், திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் எலி காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 134 பேர் எலி காய்ச்சல் தொடர்பாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கேரளாவின் சுகாதாரத்துறை மக்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.