சென்னை:
போலீஸ் ஐ.ஜி. மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.போலீஸ் ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக பெண் எஸ்.பி., அளித்த புகார் அரசுத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்
காக புதியதாக உருவாக்கப்பட்ட விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

இந்த புகார் குறித்து கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரித்து வந்தது. இந்நிலையில், விசாகா கமிட்டி அளித்துள்ள விளக்கத்தில், பெண் எஸ்.பி., அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதால், சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளோம் என்று ஏடிஜிபி சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.