புதுதில்லி;
அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா அக்டோபர் 2-ஆம் தேதியன்று ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை பணி மூப்பு அடிப்படையில் ஓய்வ பெறும் தலைமை நீதிபதியே தெரிவிப்பது நடைமுறையில் உள்ளது.
அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரைக்கும்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபயாக ரஞ்சன் கோகாய் பெயரை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்த நான்கு நீதிபதிகளில், ரஞ்சன் கோகாயும் ஒருவர் ஆவார்.

Leave A Reply

%d bloggers like this: