உத்திரபிரதேசத்தில் அலுவல உதவியாளர் எனும் வேலையாள் பணிக்கு சுமார் 3700 முனைவர் பட்டம் பெற்றவர்கள் பதிவு செய்திருப்பது நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

வெறும் 5 ஆம் வகுப்பு தகுதி கேட்கப்பட்ட 62 காலிபணியிடங்கள் கொண்ட பணியாள் வேலைக்கு 3700 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 28000 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 50000 இளநிலை பட்டதாரிகள் உள்பட மொத்தம் சுமார் 93000 பேர் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்தியன் இரயில்வேயில் 1 லட்சம் காலிபணியிடங்களுக்கு சுமார் 2 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு வருடமும் வெறும் நூற்றுக்கணக்கான சொற்ப வங்கி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

பாஜக தலைமையிலான அரசுவிடம் வேலைவாய்ப்புகள் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, சுவஜ் பாரத், ஸ்கில் இந்தியா, முத்ரா லோன் என விதவிதமான பெயர்களில் வெறும் வாய்மொழியாகவே உள்ளது என இளைஞர்களின் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.