புதுதில்லி :

ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து  18 ஆக குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து குடும்ப சிவில் சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் அனுப்பிய ஆலோசனைப் பரிந்துரையில்,   “பெரும்பாலான நாடுகளில் ஆண்களின் திருமண வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அதே வயதிலேயே வழங்கப்பட்டு உள்ளது.  எனவே, அந்த வயதில் ஆண்களுக்கு  தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் திறனும் வந்து விடுகிறது  என்று தெரிவித்து உள்ளது.

மேலும், தற்போதைய வயது வித்தியாசம், மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே காட்டுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ள சட்ட கமிஷன், அவர்களுக்கும்  சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்து உள்ளது. சட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிவடைந்த  நிலையில், பல்வேறு தனிநபர் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: