மும்பை:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்குபெறும் 14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 15–ஆம் தேதி முதல் 28–ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் களமிறங்கும் இந்திய அணி சனியன்று அறிவிக்கப்பட்டது.

முதுகு வலி காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு (சிகிச்சைக்காக) அளிக்கப்பட்டுள்ளது.விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் கேப்டனாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் விபரம்:
ரோகித் சர்மா (கேப்டன்),ஷிகர் தவான்,கே.எல்.ராகுல்,ராயுடு,மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ்,தோனி (விக்கெட் கீப்பர்),ஹர்திக் பாண்டியா,தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்),குல்தீப் யாதவ்,சஹால்,அக்‌ஷர் படேல்,புவனேஷ்வர் குமார்,ஜாஸ்பிரித் பும்ரா,ஷர்துல் தாகூர்,கலீல் அகமது.

Leave A Reply

%d bloggers like this: