லக்னோ;
உத்தரப்பிரதேசத்தில் ஐந்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு உரிய அஞ்சலர் பணிக்கு, 3 ஆயிரத்து 700 பிஎச்டி பட்டதாரிகள் விண்ணப்பித்த அவலம் அரங்கேறியுள்ளது.பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், அண்மையில் 62 அஞ்சலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கான கல்வித் தகுதி 5-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கடிதங்களை சைக்கிளில் கொண்டுசென்று உரியவர்களிடம் சேர்ப்பதுதான் இவர்களுக்கான பணி. ரூ. 20 ஆயிரம் சம்பளம்.

ஆனால், இந்த 62 பணியிடங்களுக்கு 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து அதிகாரிகளை மலைக்க வைத்தனர். இதுஒருபுறமென்றால், இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 50 ஆயிரம் பேர் பட்டதாரிகள் என்பதுதான் சோகம். சாதாரண பட்டதாரிகள் அல்ல; இவர்களில் 28 ஆயிரம் பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். 3 ஆயிரத்து 700 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், எந்தளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது என்பதைக் காட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: