மேட்டூர்;
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை நான்காவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அங்கிருந்து உபரிநீர் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை 3 முறை எட்டியுள்ளது.

இந்நிலையில்,மேட்டூர் அணை வெள்ளியன்று காலை 4ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 17 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120.04 அடியாகவும், நீர் இருப்பு 93.53 டிஎம்சியாகவும் உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: