சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விசிக பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு போலீஸ் பாதுகாப்பு
வழங்கிடக் கோரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளியன்று (31.08.2018) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் அவசர கடமையாகும்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: