ஈரோடு,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளும் மாணவர்களுக்கு 1500 மீட்டர், மற்றும் மாணவிகளுக்கு 800 மீட்டர், ஓட்டப் பந்தயமும் நடைபெற்றது. மேலும், மாணவ, மாணவியர்களுக்கான 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், பிரீஸ்டைல்,50 மீட்டர்,பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் ஆகிய நீச்சல் போட்டிகளும் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் நொய்யலின் ஜான் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: