திருப்பூரில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் மற்றும் 2 ஆம் தேதி பேரணி பொது மாநாட்டுக்கு வாகனங்களில் வருவோர் பின்வரும் விபரப்படி ஒத்துழைப்பு வழங்கும்படி மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தாராபுரம் சாலை வழியாகவும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் இருந்து காங்கயம் சாலை வழியாகவும் திருப்பூருக்கு வருவோர் காங்கயம் கிராஸ் ரோடு, வளம் பாலம் வழியாக மாநாட்டுப் பேரணி தொடங்கும் யுனிவர்சல் திரையரங்கம் பகுதிக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு, தெற்கு ரோட்டரி மின் மயானம் சாலை நொய்யல் கரையருகே உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

அதேபோல் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை மற்றும் பெருமாநல்லூர் சாலை வழியாக வருவோர், குமரன் சாலை வழியாக யுனிவர்சல் திரையரங்கம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, எம்ஜிஆர் சிலை, பார்க் ரோடு வழியாக ஜெய்வாபாய் பள்ளி சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து வருவோரும் யுனிவர்சல் திரையரங்கம் அருகே இறக்கிவிட்டு ஜெய்வாபாய் பள்ளி சாலைக்குச் செல்ல வேண்டும்.பேரணி முடிந்து டவுன்ஹாலில் பொது மாநாடு நடைபெறுகிறது. எனவே பேரணிக்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரும் பொறுப்பாளர்கள், மாநாடு முடிந்த பிறகு டவுன்ஹால் பகுதிக்கு வாகனங்களை வரவழைத்து, சம்பந்தப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மாநாடு நடைபெறும் ஹார்வி குமாரசாமி மண்டபம், பேரணி தொடங்கும் யுனிவர்சல் திரையரங்கம் அருகிலேயே உள்ளதால் பிரதிநிதிகளும் இங்கு வந்துவிடலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: தோழர்கள் எம்.ராஜகோபால் – 94860 33697, கே.உண்ணிகிருஷ்ணன் – ‭94863 93232‬, டி.ஜெயபால் – ‭94883 89202, ‬பி.பாலன் – 94871 65165, பி.ராஜேஷ் – ‭93629 29263‬ ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

-மாநாட்டு வரவேற்புக்குழு

Leave A Reply

%d bloggers like this: