புதுதில்லி;
அரசின் கொள்கைக்கு மாறாக ஒரு கருத்தை தெரிவித்தால் அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரக்கூடாது. தேசத் துரோக சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தக்கூடாது. தேசத் துரோகம் என்பதை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிஎஸ். சௌஹான் தலைமையில் இயங்கும் சட்ட ஆணையம் , இந்திய தண்டனைச்சட்டத்திலுள்ள தேசத் துரோகம் குறித்த பிரிவு 124ஏ-ஐ நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சுதந்திரமான பேச்சுரிமையும் கருத்துரிமையும் உள்ளது. அப்படியிருக்க பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோகச் சட்டத்தை இன்னும் ஏன் வைத்திருக்க வேண்டும்?

ஒருவர் அரசின் கொள்கைகளுக்கு மாறுபட்ட கருத்துகளைக்கொண்டிருந்தாலே அவர் மீது தேசத்துரோக வழக்கை ஏன் போடவேண்டும். நாட்டு நடப்புகளில் மீது விரக்தி அடைந்திருந்தாலே அதை தேசத் துரோகமாக கருதக்கூடாது. எனவே இச்சட்டப்பிரிவை நீக்குவதை பற்றி யோசிக்கலாம். அல்லது தேசத்துரோகம் என்ற பதத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.