சென்னை;
மனித உரிமை போராளிகள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறையைக் கண்டித்து தமுஎகச, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை
பெறவுள்ளது.

பீமாகோரேகான் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத சாதிய வாதிகளும், மதவெறியர்களும் திட்டமிட்டு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர்.இதற்கு எதிப்புத் தெரிவித்து
தலித்துகளும், ஜனநாயக அமைப்புகளும் முழுஅடைப்பு உள்ளிட்ட வீரியமான போராட்டங்க
ளை முன்னெடுத்தனர்.இந்த எதிர்வினையை சாதி,மத வெறியை தாங்கிப்பிடிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தங்க ளுக்கு எதிரானதாகவே உணர்ந்த னர். இதனால் ஆத்திரமுற்ற மத்திய மற்றும் மகாராஷ்டிர பாஜக அரசுகள் தலித் உரிமைப் போராளிகள் சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிங், மகேஷ் ரெளட், ஷோமா சென், ரோனா வில்சன் ஆகியோரை கைது செய்து சிறைப்படுத்தியது.

இப்போது அராஜகத்தின் அடுத்த நகர்வாக இடதுசாரி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் வீடுகளில் புகுந்து சோதனை என்ற பெயரால் வன்முறையில் இறங்கியுள்ளது.வரவர ராவ், வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கௌதம் நவலகா, ஸ்டான் சுவாமி ஆகியோரை கைது செய்துள்ளது.பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே போன்ற ஆளுமை களின் வீடுகள் அதிரடி சோதனை
களுக்கு இலக்காக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளில் குறைந்த பட்சமான சட்ட விதிமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை.சமூக விரோதிகளைப் போல் தான் அவர்களை நடத்தியுள்ளது.மத்திய மற்றும் மகாராஷ்டிர பாஜக அரசுகளின் திட்டமிட்ட காவல்துறை வன்முறைகளுக்கு எதிராக வலிமையான கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமுஎகச ஒருங்கிணைப்பில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், பெரம்பலூர் ஆகிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.மேற்கண்டவாறு தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.