தீக்கதிர்

நர்மதையில் மிதந்த 500, 1000 ரூபாய் நோட்டு..!

அகமதாபாத்;
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் ஷினோ என்ற பகுதியைச் சேர்ந்த சிலர் நர்மதா நதியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நதியில் மிதந்து வந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் இவற்றை கைப்பற்றி கணக்கிட்டதில், 36 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.