பாக்பத்;
திறந்தவெளியில் மலம் கழித்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாக்பத் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்தது, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, மீரட் அருகேயுள்ள பாக்பத் நகராட்சியில், அனைத்துப் பகுதிகளிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, ‘திறந்தவெளி கழிப்பறை இல்லா நகரம் ’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, பாக்பத் நகராட்சி நிர்வாகம், திடீரென ‘திறந்தவெளிகளில் மலம் கழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ நகர் முழுவதும் அறிவிப்பு பலகைகளை வைத்தது, அந்தப் பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், நகராட்சியின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்கிறது.

ஆனால், பாஜக-வினர் வழக்கம்போல தங்களுக்கும் இந்த பெயர்ப்பலகைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறியுள்ளனர். ஒருபடி மேலேபோய், ‘மோடி அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க யாரோ இவ்வாறு செய்துள்ளனர்’ என்றும் மழுப்பியுள்ளனர்.
தற்போது அந்த அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: