தீக்கதிர்

திண்டுக்கல்லில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி…!

திண்டுக்கல்லில் வெள்ளியன்று நடைபெற்ற தீக்கதிர் நாளிதழ், செம்மலர், மார்க்சிஸ்ட் இதழ்களுக்கான சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் 498 சந்தாக்களுக்கான தொகை 3 லட்சத்து 99 ஆயிரத்து 540 ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் வழங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.கணேசன், வசந்தாமணி, தீக்கதிர் மதுரை பதிப்பு பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.