கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் தாய் பாஜகவில் இருந்து வேறு கட்சிக்கு மாறியதால் அப்பெண்ணின் 3 வயது குழந்தையை பாஜக தலைவர் துப்பாக்கியால் சுட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்தது 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு கடுமையாக குறைந்துள்ளது. கட்டாய ஆதார், உயர் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் போன்ற பல்வேறு எதேச்சதிகார நடவடிக்கையால் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது பாஜகவினர் மத்தியிலும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. அருண்சோரி யஷ்வந்த் சின்கா போன்ற தலைவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி மத்திய அரசின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புதுல் மந்தாள். அப்பெண், அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கட்சி சார்பில் வெற்றிப் பெற்றுள்ளார். அதன்பின், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அணில் மந்தல் என்ற பாஜக கட்சித் தலைவர், சில குண்டர்களை வைத்து அந்தப் பெண்ணின் வீட்டைச் சூறையாடியுள்ளார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் கணவரும் தப்பினர். இந்நிலையில் வீட்டிலிருந்த அப்பெண்ணின் 3 வயது குழந்தையை தலையில் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, அக்குழந்தைக்கு உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பாஜக சொந்த கட்சியினருக்கு கூட தனிப்பட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற பாசிச பாணியை கடை பிடிக்க துவங்கி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.