தாராபுரம்,
தாராபுரத்தில் பணிமூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்க வலியுறுத்தி வெள்ளியன்று தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆண்ருஸ்லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி, மாவட்ட துணைச்செயலாளர் முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு வழங்கும் மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் சுகாதார அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொருளாளர் மீனாட்சி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: