திருவனந்தபுரம்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டகேரள மாநில  மக்களுக்கு தமிழகத்தி லிருந்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதியாகவும், பொருளாகவும் வாரி வழங்கி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அக் கட்சியின் சார்பில் ரூபாய் பதினைந்து லட்சத்திற்கான காசோலையை பேரிடர் மீட்பு நிதியாக வழங்கினார். கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆக.31 அன்று அளித்தார்.
ஏற்கெனவே, பத்து லட்சம் மட்டும் காசோலை வழங்குவது என அறிவித்திருந்த நிலையில் தற்போது ரூபாய் பதினைந்து லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் விரைவில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கியவர்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருவோருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உதவி செய்ய விரும்புவோர் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு அக்கட்சி சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: