கோவை,
கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான பந்தல் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த புதனன்று வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவர் பணியாற்றி வந்த இடத்திற்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து மணிகண்டன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலுசாமி உள்ளிட்டோர் அவரை அடித்து கொன்றுள்ளனர். ஆகவே, இவரது மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து வேலுச்சாமி உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை பெறமாட்டோம் எனக்கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.