ஸ்ரீநகர்;
“காஷ்மீரின் புதிய ஆளுநர் எங்களுடைய ஆள்” என்று அம்மாநில பாஜக தலைவர் கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

காஷ்மீர் மாநில பிடிபி கட்சியின் ஆட்சியை, கடந்த ஜூன் 19-ஆம் தேதி பாஜக கவிழ்த்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது. மேலும், ஜம்மு – காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுநராக இருந்த என்.என். வோரா-வை மாற்றி, அந்த இடத்திற்கு சத்யபால் மாலிக் என்பவரை நியமித்தது. அவர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.பாஜக-வின் முன்னாள் தேசிய துணைத் தலைவரான சத்யபால் மாலிக், அரசியல் கட்சியைச் சேர்ந்த முதல் காஷ்மீர் ஆளுநர் என்று கூறப்படுகிறார். ஆனால், “தான் அரசியல்வாதிதான் என்றாலும் காஷ்மீரில் அரசியல் செய்ய மாட்டேன்; மாநில முன்னேற்றத்துக்காக அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசுவேன்” என்று சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய ஆளுநர் “எங்களின் ஆள்தான்” என்று அம்மாநில பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னா பேசியிருப்பது சமூக வலைதளங்களில் காணொலியாக பரவி வருகிறது. அதில், “முன்னாள் ஆளுநர் என்.என். வோரா, அவர் இஷ்டப்படி நடந்து கொண்டதால், அவரை மாற்றினோம்; ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள ஆளுநர் எங்கள் ஆள்” என்று ரவீந்திர ரெய்னா குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.