திருப்பூர்,
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று திருப்பூர் பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 15 சதவிகிதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவபடி ரூ.1,000 இருந்து ரூ.2,000 மாக உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாநில உதவி செயலாளர் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க கிளை செயலாளர் முத்துசாமி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் ஆர்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் முகமது ஜாபர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிறைவாக, ஓய்வூதியர் சங்க கிளை உதவி செயலாளர் பழனிவேல்சாமி நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: