பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகத்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு, புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய  500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரமர் மோடி செல்லாது என அறிவித்தார். அதன் பின்னர்  அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுக்கள் என  புதிய  2,000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் இதுவரை வெளியிடப்பட்டன.
ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுக்கள் என எந்த நோட்டுக்களை மத்திய அரசு அறிமுகம் செய்ததோ அதே நுட்பத்துடன் கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டு புழக்கக்த்தில் வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கள்ள நோட்டு புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்திருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  2016-17-ம் ஆண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வெறும் 199 மட்டுமே பிடிபட்டது.  ஆனால் 2017-18-ம் ஆண்டில் 9,892 நோட்டுகள் பிடிபட்டு இருக்கிறது.
அதே பால் 2016-17- ஆம் ஆண்டில்  2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள்  638 பிடிபட்டது. ஆனால் 2017-18-ம் ஆண்டில்  17,929 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.  மேலும் இதே போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீதமும், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 154 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக  ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உயர் பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுக்கள் நீக்கத்திற்கு பின்  கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியே உறுதிபடுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.