சென்னை;
ஆங்கிலம் படித்தால்தான் மருத்துவர் ஆக வேண்டும் என்றால் மாநில மொழி களுக்கு என்ன மரியாதை என்று சிபிஎம் தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், கே.பால கிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

சென்னையில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசியதாவது:
நீட்தேர்வு எழுதிய ஒருலட்சம் மாண வர்களில் 24ஆயிரம் தமிழ்வழியில் தேர்வு
எழுதினார்கள். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக
இருந்தன. இதன் விளைவாக தமிழ்வழி யில் கற்கக்கூடிய மாணவர்களில் பலர்
மருத்துவக்கல்விக்கு போகும் வாய்ப்பை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பாக சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.வினாக்கள் அனைத்தும் தவறாக இருக்கிறது என்று தெளிவாக கூறினார்கள்.

பழியை வேறு ஒருவர் மீது போடாதீர்கள்                                                                                                                      இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேல்முறையீடு செய்தது. இதற்கிடையில் மாநிலங்களவையில் இந்த பிரச்சனை விவாதத்திற்கு வந்தபோது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது இந்த நீட் தேர்வுத்தாள் வினாக்கள் தவறாக இருந்த தற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்றார்.

மொழிபெயர்ப்புக்காக நாங்கள் அவர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் தவறாக மொழி
பெயர்த்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இது நாடாளுமன்ற அவை குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ளது.வினா எழுப்பியது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர். பிறகு வேறு ஒருவிவாதம் வந்த போது நான் அமைச்சருக்கு பதில் அளிக்கையில் பழியை இன்னொருவர் மீது போடா
தீர்கள். நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசு.தற்போது தவறு என்பதை ஒப்புக்கொண்டிருக் கிறீர்கள் என்று நான் கூறினேன். உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல் முறையீட்டில் எதுவும் தவறு என்று வாதாட வில்லை. எல்லா வினாக்களும் சரியாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 13 லட்சம் மாணவர்களில் 10 பிராந்திய மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். ஆங்கில அறிவு இல்லாமல் எம்பிபிஎஸ் படிக்கவே  முடியாது என்பதுதான் சிபிஎஸ்இ வாதம்.

மத்திய அரசின் இரட்டை நாக்கு
ஆங்கில அறிவு இல்லாதவர்கள் எம்பி பிஎஸ் படித்து என்ன பயன் என்று அது
கேட்கிறது. எங்களது வாதம் பல ஆண்டு களுக்கு முன்பு வரை தமிழ்மொழியில் தேர்வு
எழுதிய மாணவர்கள் அனைவரும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இன்று தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்களாக இருக்கிறார்கள். உல கின் பல நாடுகளில் பணிபுரிகிறார்கள். இது சரியல்ல என்பது எங்களுடைய வாதம். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்
நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்லிவிட்டு, தவறு நடந்திருக்கிறது, நாங்கள் செய்யவில்லை, தமிழக அரசுதான் செய்துவிட்டது என்று கூறிய மத்திய அரசு அதனுடைய சிபிஎஸ்இ மூலமாக தவறான கருத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக் கிறார்கள். மற்றொன்று ஆங்கிலம் படித்தால்  தான் மருத்துவர் ஆகமுடியும் என்று சொன்னால் மாநில மொழிகளுக்கு மரியாதை
இல்லை என்பதையும் அவர்கள் சொல் கிறார்கள்.

சும்மா இருக்கும் எடப்பாடி அரசு
மாநில அரசு உயர்நீதிமன்றத்திலும் வாதாடவில்லை. தமிழ் மாணவர்களை பாது
காக்க உச்சநீதிமன்றத்திற்கும் வரவில்லை. தமிழ்வழியில் எழுதக்கூடிய மாணவர் களுக்காக மட்டுமல்ல தமிழக அரசின் மீது பழிவந்திருக்கிறதே அதைப்போக்கு வதற்குகூட தமிழகத்தில் உள்ள அரசு தன்சார்பில் வாதாட கூட வழக்கறிஞர்களை அனுப்பவில்லை. மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் தமிழ்வழியில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மிகப்பெரிய ஆபத்து
உச்சநீதிமன்ற தீர்ப்பு வியாழனன்று வந்த வுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதை கண்டித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் இதை கண்டிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது.இது ஏதோ கட்சிப்பிரச்சனை அல்ல. அதிமுக அரசும் பாஜகவும் எந்த பிராந்திய மொழியாக இருந்தாலும் அந்த மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை எடுத்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்தாக முடியும் என்பதை சுட்டிக்காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது . எனவே ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து தமிழ்மக்களும் நம்முடைய மொழியை பாதுகாப்பதற்காக நம்முடைய குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு வரை எல்லாத் தேர்வுகளையும் தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற  மாணவர்களைப்போல் எழுது வதற்கு முயற்சிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் சரி, எங்களுடைய வாதத்திலும் சரி ஏற்கெனவே அதிக மதிப்பெண் பெற்றிருக்கக்கூடிய திறமையான
மாணவர்களை தொடக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் 49மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்தாண்டு பத்துபேரோ 20பேரோ கூடுதலாக சீட் கொடுத்தால் ஆயிரம் தமிழ்வழி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.
ஏற்கெனவே தேர்வு பெற்றவர்கள் அல்லது கல்லூரி செல்ல நேர்முகத்தேர்வை முடித்தவர்
கள் மீது எங்களுக்கு எந்தவிதமான மோதலும் இல்லை. அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். மெரிட்டோ ரியல் மாணவர்கள் பாதிக்கவேண்டும் என்பது
எங்களது நோக்கம் அல்ல. தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு நியாயம் வழங்க
வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஆபத்து வராமல் பாதுகாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் போராட முன்வரவேண்டும் என்று நாங்கள் அறைகூவி அழைக்கிறோம். தமிழ்மொழியை பாதுகாப்பதற்கு, பிராந்திய மொழியை பாதுகாப்பதற்கு தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள் ஆகும். இவ்வாறு டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.

4பேர் தான் தேர்வு
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், தேர்வுத்தாள் தவறுக்கு நீதி கேட்டு நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். உச்சநீதிமன்றம் நியாயத்தை வழங்கவில்லை. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்களது கட்சி
யின் நிலைப்பாடு. அதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் முதல் பக்கத்திலேயே நாங்கள் சொல்லி யிருக்கிறோம். நீட்போன்ற தேர்வு நடந்தால் குளறுபடிகள் ஆகும். பலர் பாதிக்கப்படு வார்கள் என்று நாங்கள் சொன்னோம். அதைத் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தாண்டு தமிழ்வழியில் படித்த மாண வர்களில் 4பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரி யில் சேர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில் படித்தால் தான்உயர்கல்விக்கு செல்லமுடியும் என்றால் தமிழ்வழியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும். கோச்சிங் சென்டருக்கு சென்றால்தான் லட்சக்கணக்கில் பணம் செல வழித்தால்தான் தேர்வு செய்யமுடியும் என்றால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவராக முடியாது. எனவேதான் நீட்  தேர்வை நாங்கள் வேண்டாம் என்று தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.