நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கரோலின் வொஸ்னியாக்கி (டென்மார்க்),உக்ரைன் வீராங்கனை ட்சுரென்கோவிடம் 4-6,2-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அதிரடிக்கு பெயர்பெற்ற ரஷ்யாவின் கஸட்கினா,பெலாரஸின் சாஸ்நோவிச்விடம் 2-6,7-6(3-7) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்: (மாலை 4 மணி வரை)

ஆடவர் ஒற்றையர்
ரோஜர் பெடரர் (சுவிஸ்)
நோவக் ஜோகோவிச் (செர்பியா)
ஜுவேரவ் (ஜேர்மனி)
மரின் சிலிக் (குரோஷியா)
நிஷிகோரி (ஜப்பான்)

 

மகளிர் ஒற்றையர் பிரிவு
கேர்பர் (ஜேர்மனி)
ஷரபோவா (ரஷ்யா)
கிவிடோவா (செக்குடியரசு)
கர்சியா (பிரான்ஸ்)                                                                                                          ஜெலினா(லத்வியா)

Leave A Reply

%d bloggers like this: