நாமக்கல்,
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். கூரை வீட்டில்வசித்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேந்தமங்கலம் தாலுகா பொம்மசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீ.பி.சபாபதி, ஒன்றிய தலைவர் எஸ்.செல்வம் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக தொழிலாளர்க கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம் அம்மாசிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சங்கத்தின் மாநிலகுழு உறுப்பினர் சம்பூரணம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொடிக்கால்பாளையத்தில் ஒன்றியத் தலைவர் கதிர்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி மற்றும் ரங்கசாமி, பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.