நாகப்பட்டினம்;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய விழாவிற்காக ஆக.29 மாலை 6.50 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றி வைத்தார். கொடியேற்று நிகழ்ச்சியில் நாகை ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், பேராலய அதிபர் ஏ.எம்.ஏ.பிரபாகரன், பேராலயத் துணை அதிபர் எஸ்.ஏ.சூசைமாணிக்கம், பி.யாகப்பா ராஜரெத்தினம் மற்றும் பங்குத் தந்தைகள், குருமார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்களுடைய, பல்வேறு உடைகள், மொழிகள், நிறங்கள், சாதி, மதங்களைக் கொண்ட மக்கள் விழாவில் சங்கமித்தனர். ஒற்றைக் கலாச்சாரத்தை வியாபித்திட மதவெறிக் கொண்டு அலையும் குறுகிய வட்டத்திற்கு இதுதான் மானுடம், இதுதான் உலகம் என்று அறைகூவிப் பறை சாற்றுவதுப் போல் அமைந்திருந்தது இவ்விழா.

Leave a Reply

You must be logged in to post a comment.