டாக்கா;
வங்க தேசத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பெண் நிருபர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

32 வயதான சுபர்ணா நோடி, ‘ஆனந்தா’ என்ற தனியார் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். டாக்காவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பாப்னா மாவட்டத்தில் ராதாநகர் பகுதியில் அவர் வசித்து வந்தார்.கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோடியின் மரணத்துக்குப் பத்திரிகையாளர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: