கோவை,
ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் வழங்கக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். வறுமைக்கோட்டை காரணம் காட்டி மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அத்தியாவசிய பொருட்களின் அளவை குறைக்கக் கூடாது. உணவு கிடங்குகள், நியாயவிலைக் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மண்டல தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார், மண்டல செயலாளர் ஏழுமலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.