திருச்சி:
திருச்சி முக்கொம்பு அணையில் நடைபெறுகின்ற சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர் வியாழனன்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருச்சி முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் ஆற்று அணை யில் 9 மதகுகள், 8 தூண்கள் உடைந்தன. இதையடுத்து 90 லட்ச ரூபாய் செலவில், அப்பகுதியில், தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, உடைந்த மதகுகள் இருந்த பகுதிகளில், மணல் மூட்டைகளை அடுக்கும் பணி, 8ஆவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த பணியில் சுமார் 800 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகளை கொண்டு, கொள்ளிடம் அணையின் மதகுகள் உடைந்த பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தும் பணிளை, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர் வியாழனன்று, நேரில் ஆய்வு செய்தார். உடைந்த மதகு பகுதிக்கு மேற்கே படகில் சென்றும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முக்கொம்புவில் உள்ள முகாம் அலுவலகத்தில், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.