சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடைக்குச் செல்லும் 57 எஃப் வழித்தட பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கியபடி பட்டா கத்திகளை தரையில் தீட்டியப்படி ரகளையில் ஈடுபட்டனர். மேலும்  “மாநில கல்லூரிக்கு ஜே” என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பேருந்திற்குள் அமர்ந்தவர்களும் சாலையில் பயணித்தவர்களும் இதை பார்த்து அச்சம் அடைந்தனர். இந்நிலையில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்நது சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கத்தியுடன் பணித்தவர்கள் மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை மாநில கல்லூரியும் விசாரணை  மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற மாணவரை அண்ணா சதுக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட ஆனந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: