மதுரை:
1 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள் நடைபெற்றாலோ (அல்லது) அதன் விபரங்கள் அறிந்தாலோ,அது குறித்தான புகார் தெரிவிக்கும் பொருட்டு தேசியக் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் இணையதள முகவரி www.ncpcr.gov.in-ல் POSCO E – BOX என்ற மின்னணு புகார் பெட்டியில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் குற்றம் தொடர்பான சம்பவத்தின் விபரங்கள், குற்றம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்புடைய எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களையும் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.நடராஜன்

மேலும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிராக நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகை 0452 – 2642300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.