நியூயார்க்;
பாதுகாப்பான தீவிரவாதம் இல்லாத தெற்காசியாவை உருவாக்க பாகிஸ்தான் ஆக்கபூர்வமாக உதவும் என நம்புவதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான சையத் அக்பருதீன் பேசுகையில், பாகிஸ்தானில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பிரதமரான இம்ரான் கான் தலைமையிலான அரசு, தீவிரவாதம், வன்முறை இல்லாத பாதுகாப்பான தெற்காசியாவை உருவாக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட உதவும் என நம்புவதாக கூறினார்.
வெளிப்படையான மற்றும் இடைக்கால பிரச்னைகள் குறித்தும், எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் பற்றி பாகிஸ்தானின் தொடர்ச்சியான குறிப்புகள் குறித்து குறிப்பிட்டு அக்பருதீன் பேசினார்.

அப்போது, ‘‘இந்த வாய்ப்பை பாகிஸ்தான் பயன்படுத்திகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் பற்றி தேவையற்ற குறிப்புகளை உருவாக்கிடதூண்டு கோலாக உள்ள அம்சங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டாம்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், காஷ்மீரை இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் மையப் பிரச்னையாக குறிப்பிடுகையில், இரு நாடுகளும் அமர்ந்து கவலைக்குரிய விவகாரங்களைப் பற்றி விவாதிக்கவேண்டும் எனவும் கூறினார்.‘‘அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தும் பணிகளில் பாகிஸ்தான் ஈடுபடும். அனைத்து அண்டை நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவை மேம்படுத்துவேன். அண்டை நாடுகளுடன் அமைதியை ஏற்படுத்தாமல், பாகிஸ்தானில் நம்மால் அமைதியை கொண்டு வர முடியாது. இந்தியாவுடனும், இந்திய அரசுடனும் நல்லுறவை ஏற்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது; இரு நாடுகளின் தலைவர்களும் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பாக, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை விவகாரத்தில், இந்தியா ஒரு படி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் 2 படி எடுத்து வைக்கும்’ என தனது முதல் உரையில் இம்ரான் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.